மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 1357 பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

அதன்படி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொற்றாளர் அதிகமாகவுள்ள பகுதி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடி, விபுலானந்தா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இந்த பணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இதில் இராணுவ மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்ட அதேவேளை 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு இங்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here