யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதேபோல், அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 50ஆக அதிகரித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here