வவுனியாவின் உயரதிகாரிகளிற்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

குறித்த சட்டவாதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாவட்டச்செயலகத்தின் உயர் அதிகாரிகளிற்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.

குறித்த முடிவுகள் இன்றையதினம் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி குறித்த அதிகாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here