வவுனியா, புதுக்குளம் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
தோணிக்கல் பகுதியை சேர்ந்த 18 வயதான தனுசன் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.
குறித்த மாணவனைத் தேடும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே அப்பகுதியில் இருந்த கால்வாயில் பாறைகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.