மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது என மாகாண சுகாதாரப்பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.