தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய கண்ணாடியிழை படகொன்று,  மீனவர்களால்  மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) மாலை தலைமன்னார் கடல் பகுதிக்கு சற்று தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கி வந்த கண்ணாடி இழை படகினை, அப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தலைமன்னார் பியர் பகுதி மீனவர்களால் குறித்த படகு மீட்கப்பட்டு, தலைமன்னார் பியர் இறங்குதுறை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர்கள், தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இவ்வாறு மீட்கப்பட்ட படகில் ‘அமுத விஜி ஸ்ரெபானி’ எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கடற்கரைப்பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு முன் பாதுகாப்பாக அப்படகு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here