கிளிநொச்சி- திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு, கொழும்பிலிருந்து வருகைதந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தபட்ட நிலையில் அவரது கணவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன், பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில்  தொற்றில்லை என முடிவுகள் வெளிவந்திருந்தன.

ஆனால் 14நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மரண வீட்டுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் 20பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களின் குடும்பங்களுக்கு மனிதாபினமான உதவிகள் தேவைப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here