யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலையில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6பேர்  காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, 976 குடும்பங்களை சேர்ந்த 3540பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 53 வீடுகள் முழுமையாகவும், 2008 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா  சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here