கிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்

கிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நாளை (01) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நாடளாவிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் கொரோனா நோயாளியொருவர் அடையாளங்காணப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டன.

இந்நிலையில், நாளை முதல் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான மாவட்ட செயலணியின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here