இலங்கையில் பரவிய புரெவி புயல் தற்போது வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில்  மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில்  பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரெவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிவர் புயல் வந்த ஓரிரு நாட்களிலேயே புரெவி புயல் உருவாகி இலங்கையில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய இந்நிலையில் மீண்டும் ஓர் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு அது எங்கெல்லாம் உருக்கொள்ளுமோ என வானிலை ஆய்வாளர்கள் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here