null

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளை பேணி வந்த மூன்று வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியரை ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன கூறியுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here