இரண்டாவது கொரோனா தொற்றாளர் பூநகரி ஜெயபுரத்தில் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளி தனிமைப்படுத்தலை மீறிப் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தமை அம்பலமானமையை அடுத்தே இப்பகுதிகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி சொந்த இடமான ஜெயபுரத்திற்குத் திரும்பியிருந்த நிலையில் அவர் அவரது வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவ்வேளையிலேயே தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்துள்ளார்.
அடுத்து அவருக்கு யாழ்.போதனா மருத்துவமனையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அவர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய ஆய்வில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் நடமாடியமை பலரைச் சந்தித்துப் பலருடன் பழகியமை தெரிய வந்ததை அடுத்தே குறித்த பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here