திருகோணமலை – கோமரங்கடவல வனப்பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here