பருத்தித்துறை – யாழ்ப்பாணம் தனியார் பஸ் சேவை (750 வழித்தடம்) சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கரவெட்டி, இராஜகிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் பஸ்களின் சாரதிகளாகவும், நடத்துநர்களாகவும் பணியாற்றுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, இராஜகிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா தொற்றிருப்பது நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றுவந்த அவர், தொற்று இனங்காண முன்னர் சுதந்திரமாகக் கிராமத்தில் நடமாடியுள்ளார்.
