கொரோனா தொற்றாளர் ஒருவர் இரு தடவைகள் சென்று வந்தார் என்று தெரியவந்ததை அடுத்து, பருத்தித்தித்துறை நகர் மத்தியில் உள்ள தையலகம் ஒன்று சுகாதாரப் பகுதியினரால் மூடப்பட்டுள்ளது.
அந்தத் தையலகத்துடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்ததை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஏதொற்றுடன் இனங்காணப்பட்ட பொலிகண்டியைச் சேர்ந்தவர், பருத்தித்துறை நகரில் மத்திய சந்தையுடன் இணைந்து காணப்படும் சந்தைத் தொகுதியில் உள்ள தையலகம் ஒன்றுக்கு இரு தடவைகள் சென்றுவந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அதையடுத்து அந்தத் தையலகம் சுகாதாரப் பகுதியினரால் மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரும், அங்கு பணியாற்றியோரும் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தையலகத்துக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் விவரங்களும் சுகாதாரப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.
