யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்ததன் பின் அவர்கள் பயணித்த இடங்கள் சுகாதார பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பருத்தித்துறை – மயிலிட்டி – கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாகஉங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை உடன் தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த வழித்தடங்கள் வருமாறு,

21/10/2020- பருத்தித்துறை – ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத் தொகுதி) மற்றும் பருத்தித்துறை பஸ் நிலையப் பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்

23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் – ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு

அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு – பொலிகண்டியில் இருந்து – பலாலிக்கு

24/10/2020 -கீரிமலை – பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து – பொலிகண்டி பகுதிக்கு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here