அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5பேர்,  இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளை இதன்போது பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, திருக்கோவில் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையிலான பொலிஸார், சம்பவதினமான இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்

இதன்போது மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்ததுள்ளர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here