கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்திய போது அதனை முந்திச் செல்ல முற்ப்பட்ட கிளிநொச்சியில் இருந்து வவுனியா திசை நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியா திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
இதில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வவுனியா பக்கம் இருந்து கிரவலுடன் வந்துகொண்டிருந்த டிப்பர் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் பெட்டி உடைந்துள்ளது தரிப்பிடத்தில் நின்ற தனியார் பேருந்தும் சேதமடைந்துள்ளது . இனால் சில நிமிடங்கள் ஏ9 பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
Posted by TN Neethan on Thursday, December 27, 2018