வவுனியா, குமாங்குளம் பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தை ஒன்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை இன்று காலை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயூரன் ராஜினி எனும் 33 வயதுடைய தாய் மற்றும் அவருடைய 4 வயது குழந்தையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

இறப்புக்கான கரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை, பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here