கெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரெனப் பிடித்த தீ தற்பொழுது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இரண்டு மணி நேரமாக இந்த தீ இருந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.