யாழ்ப்பாணம் நெடுங்குளம் – கொழும்புத்துறை பகுதியில் ரயிலில் மோதுண்டு இரண்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பகல் 12.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மோட்டார் சைக்கிலில் சென்ற இரண்டு இளைஞர்களே ரயியில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
யாழ்.தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.