வவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
வவுனியா உக்குளாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.07.2018) அதிகாலை 4.00 மணியளவில் 19வயதுடைய உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
இந் நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியறையில் உறங்கியுள்ளார். வழமை போன்று தங்கையை எழுப்புவதற்கு இன்று அதிகாலை சகோதரன் அறைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.