புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் வசித்துவரும்  சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் அதே இடத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 01 ஆம் திகதி கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமி ஒருவரை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள  வீட்டிற்கு அழைத்து சென்று குறித்த சிறுமியை 24 வயதுடைய இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயற்சித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை நேற்றுமுந்தினம் (02) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். இதன்போது குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்கடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here