கொழும்பில் அமைந்துள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்கு அருகில் பிரபல இரவு நேர விடுதி ஒன்று மிகவும் நுட்பமான முறையில் நடத்தி செல்லப்படுகின்றது.

இதனை நடத்தி செல்வதற்கு பொலிஸ் மற்றும் மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு மாதாந்தம் லட்ச கணக்கில் லஞ்சம் வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

நட்சத்திர தரத்திலான இரவு நேர விடுதியை அரசியல் பாதுகாப்பு பெறும் சீன நாட்டவர்கள் சிலர் நடத்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இரவுநேர விடுதியில் சீன பெண்கள் உட்பட விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். ஒரு நபர் 3 பெண்களுடன் அறைக்கு செல்ல 27000 ரூபாய் பணம் வழங்குவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் சிகரட் மற்றும் போதைப்பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இரவு நேர விடுதி, குறித்த பாடசாலையில் கற்கும் மாணவிகளின் பெற்றோரின் எதிர்ப்பினால் சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் அரசியல் பாதுகாப்புடன் இந்த இரவு நேர விடுதி திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் 3 லட்சம் ரூபா வரையில் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here