ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட முன்பள்ளி கட்டிடத்தில் மாலை நடைபெற்றது
இக்கூட்டத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்புதிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வடக்குமாகாணசபை உறுப்பினரை நேரடியாக சந்தித்தும் கடிதமூலம் எமது கிராமத்தில் உள்ள வீதிகள் புனரமைக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை தெரியப்படுத்தியமைக்கமைவாக அரச ஊழியர் வீட்டுத்திட்ட கிராமத்தின் வீதிகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 10ம் ஒழுங்கை(1KM), 2ம் ஒழுங்கை (1KM), 8ம் ஒழுங்கை (0.5KM), 5ம் ஒழுங்கை (0.5KM), 3ம் ஒழுங்கை (0.5 KM), 1ம் ஒழுங்கையில் கல்வெட்டு இரண்டு அமைப்பது, 11ம் ஒழுங்கைக்கு செல்வதற்கான முன் குறுக்கு வீதி(200M)
6ம் ஒழுங்கையில் சிறு திருத்தம், இவ்வீதிகள் அனைத்தும் திருத்தப்பட்டதன் பின்பு உள்ள மிகுதி நிதியில் 1ம் வீதியின் பிற்பகுதி திருத்தம் மற்றும் 20 மின்விளக்குகள் பொருத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது இவ்வேலைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்க உத்தேசம் தெரிவிக்கப்பட்டது
இச்சந்திப்பில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுதிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.பேர்ணாட், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சு.வரதகுமார், ஓய்வுபெற்ற பொறியியலாளர் கு.சிவகுமாரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் வடக்குமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.