ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என இன்று நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் ஒன்றிலேயே இந்த சம்பவம் நடைபெறுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் வீட்டுத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கிளிநொச்சி நகர் மற்றும் இதுவரை வீட்டு திட்டங்கள் கிடைக்காத மக்களிற்கு வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், இடம்பெயர்ந்து சென்று கூட்டாகவோ அல்லது தனியாகவோ மீண்டும் திரும்பி வந்தவர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இதன் பொது கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here