வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்றும் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும்.

இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பமான கால நிலையின் போது கூடுதலான அளவு நீரை பருகுவது முக்கியமானதாகும் என்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும். அதனை தொடர்ந்து வெப்ப நிலை சற்று தணியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here