ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு , ஒருமித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இணைந்து ஏற்படுத்தப்பட்ட நாவலப்பிட்டி நகரசபையின் முதலாவது சபை அமர்வு  இன்று நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
 15 உறுப்பினர்களைக் கொண்ட நாவலப்பிட்டி நகரசபையின் தவிசாளராகவும் உபதவிசாளராகவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச்சபையின் ஆளுங்கட்சியின் சார்பாக 9 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 5 பேரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக ஒருவருமாக உள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப் பெற்ற நாவலப்பிட்டி நகரசபையை எதிர்கட்சியினர் கைப்பற்றுவதற்கு பல்வேறு  முயற்சிகள் மேற்கொண்ட போதும் இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைத்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
இந்தச்சபையின் முதலாவது சபை அமர்வு நிகழ்வில் அமைச்சர் லக்ஷ்மன் பண்டார கிரியெல்ல கலந்து கொள்ளவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here