தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 30ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஹட்டன் டி.கே.டப்ளியு கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ள மே தினக்கூட்டம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்தக்கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள், சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள், இளைஞரணி மற்றும் மகளிரணி இணைப்பாளர்கள், தொழிற்சங்க பணி மனை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.