புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் பாலாவி -நாகவில்லு பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் நோக்கி வான் ஒன்றில் சென்றுகொண்டிருந்தவர்களுடன் கொழும்பு நோக்கி வந்த லொறி ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 5 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.