வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாயும், மகளும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தனது மகளை பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றபோது சூசைப்பிள்ளையார்குளம் வீதிவழியாகச் சென்ற மரக்கறிகள் ஏற்றிய கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் மோதியுள்ளது.

இதன்போது, இறம்பைக்குளம் மகளிர் கல்லாரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும் மோட்டார் சைக்கிளினைச் செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மரக்கறி வாகனத்தையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் வீதியிலுள்ள தனியார் பேருந்து உரிமையாளரின் மனைவி மற்றும் மகளுமே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here