கல்லிருப்புக் கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் 2018ம் ஆண்டுக்கான வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு முன்வழக்கப்படி 23.04.2018ம்திகதி திங்கள் கிழமை சீட்டெலுதும் வைபவம் நடைபெற்று கிராமங்களுக்கான சீட்டுகள் வழங்கப்பட்டு பொங்கல் விடயம் சம்பந்தமான நிர்வாகசபைக் கூட்டமும் நடைபெற்றது.
கல்லிருப்புக் கண்ணகை அம்மன் வைரவ சுவாமி முன்வழக்கப்படி ஊர்சுற்றும் நிகழ்வானது 30.04.2018ம் திகதி ஆரம்பமாகி 06.05.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திரும்பவும் இருப்பிற்கு வந்து 14.05.2018ம் திகதி கும்பம் வைத்து தொடர்ந்து எட்டு நாட்கள் திருவிழா நடைபெற்று 21.05.2018ம் திகதி திங்கள் கிழமை பொங்கல் உற்சவத்துடன் நிறைவுபெறும்.