யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் நேற்று புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று நான்கு மதங்களின் வணக்கஸ்தலங்களையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும் என்றும், தற்போது கொண்டுவரப்பட்ட ஆலய வடிவிலான சிலையை வைக்க முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதுவரை புத்தர் சிலையை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் மாணவர்களை முரண்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தமிழ் மாணவர்கள் மாத்திரமே அங்கிருந்து வெளியேறியுள்ளதோடு, ஏனைய மாணவர்கள் வளாக நிர்வாக கட்டடத்தின் முன்பாக தொடர்ந்தும் கூடியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here