வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சங்குளம் வயல் பகுதியினை அண்டிய காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தலமையிலான குழுவினர் குறித்த இடத்தினை முற்றுகையிட்ட சமயத்தில் புதையல் தோண்டிய நபர்களில் இருவர் தப்பித்து சென்றுள்ளதுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் ஓமந்தை , கிளிநொச்சி , தேவகுளம் பகுதியினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்த தெரியவருவதாகவும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி , அலவாங்கு , சவல் போன்ற பொருள்களை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேகநபர்களையும் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here