பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய போது அது தொண்டையில் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பரசிட்டமோல்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here