கொழும்பு – பாலத்துறை பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவை சேர்ந்த இரண்டு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஆறு கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கூரிய ஆயுதங்கள் சிலவும் சந்தேநபர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 மற்றும் 26 வயதான இந்த சந்தேகநபர்கள் கொழும்பு – 15 பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள், பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் என்பவரின் பிரதான சகா எனக் கூறப்படும் புக்குடு கண்ணா என்பவருக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளை அடுத்து இதுவரை 26 இற்கும் மேற்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here