யாழ். பண்­ணைக் கடற்­கரை தற்­போது பல பொழுது போக்கு அம்­சங்­கள் நிறைந்த இட­மா­கப் பேணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­க­ளி­லும் பார்க்க தற்­ச­ம­யம் இங்கு பொழு­தைக் கழிக்க வரும் மக்­கள் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது. உடற்­ப­யிற்­சிக்கு வரு­ப­வர்­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வேறு இடங்­க­ளில் இருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­கள் என குறித்த பகுதி மாலை வேளை­க­ளில் நிரம்பி வழி­கி­றது. சனி, ஞாயிறு தினங்­க­ளில் இங்கு பொழு­தைக் கழிக்க வரு­வோர் தொகை இன்­னும் அதி­கம்.

குதி­ரைச் சவாரி, பட­குச் சேவை என்பவையும் மிக­வும் சிறப்­பா­னவை. ஆனால் இங்கு வரும் சில இளம் ஜோடி­கள் நடந்து கொள்­ளும் விதம் சிறு­பிள்­ளை­ க­ளைக் கூட்­டிக்­கொண்டு பொழு­தைக் கழிக்­கச் செல்­லும் பெற்­றோரைக் கூச்­சப்­ப­ட­ வைக்­கின்­றது. இங்கு வரும் ஜோடி­கள் தங்­க­ளை­யும் மறந்து, அரு­கில் நிற்­கும் பொது மக்­க­ளை­யும் பொருட்படுத்தாது, முகம் சுளிக்­கும் விதத்­தில் அநா­க­ரீ­க­மாக நடந்து கொள்­கி­றார்­கள்.

இதில் பெரும்­பா­லா­னோர் தனி­யார் வகுப்­புக்­க­ளுக்கு கற்­கச் செல்­லும் மாணவ மாண­வி­யரே. இவர்­க­ளது பெற்­றோர் இவர்­களை படிக்க என்று அனுப்பி வைக்க, இவர்­கள் பெற்­றோ­ரை­யும் ஏமாற்றி கடை­சி­யில் தாங்­க­ளும் ஏமாற்­றப்­பட்டு நிற்­கும் நிலை­தான் மிஞ்­சிப் போகி­றது. இவர்­களை கட­வுள் தான் காப்­பாற்ற வேண்­டும் என்று கூறு­வ­தைத் தவிர எம்­மால் வேறென்ன செய்­ய­மு­டி­யும்?

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here