வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் ஒன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து ஐந்து மாதங்கள் நிரம்பிய யானை குட்டி ஒன்றை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக வவுனியா வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோந்து சென்ற பூவரசங்குளம் பொலிசார் யானைக்குட்டியின் சடலம் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யானைக்குட்டியானது உணவுடன் சென்று வயிற்குள் வெடிக்க கூடிய ஒருவகை வெடிபொருளை உண்டதன் காரணமாகவே மரிணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வன ஜீவராசிகள் திணக்களகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

கோவில் புளியங்குளம் கிராமத்திற்குள் ஐந்து நாட்களுக்கு மேலாக குறித்த யானைக்குட்டி நடமாடியுள்ளது. கடந்த ஏழு நாட்களுக்கு முன் இக்குட்டியானது இறந்துள்ளது. இந் யானைக்குட்டியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் வன்னி மாவட்டத்தின் மிருகவைத்தியர் வி.கிரிதரன் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் யானைக்குட்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here