லந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம பகுதியில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து  வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பகுதியிலே கொத்மலை ஆற்றுப்பகுதியில் வீழ்ந்து 18.04.2018 மாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளானது
ஆகரப்பத்தனை பசுமலை பகுதியிலிருந்து லிந்துலை நோக்கி வந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை மீறீ பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளனதாகவும் வேன் சாரதி உட்பட அதில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் படுகாயமடைந்து லிந்துலை வைத்தியசாலைக்கு அனுமதிக்ப்பட்ட போதிலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here