26 C
Vavuniya
Wednesday, September 27, 2023
முகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு

இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு

0

ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை யொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here