கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் இன்றைய தினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 59 வயதுடைய சுனில் வனிகசேகர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும், இவர் நேற்று அல்லது நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டில் இருந்து வெளியே வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்குச் சென்று கதவை திறந்து பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதாக என்ற கோணத்தில் கினிகத்தேனை பொலிஸாரும், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.