வவுனியா – வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த தமிழ்ப் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இதேவேளை, செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தெரிவில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்விக் கண்டுள்ளது.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித் தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.