பாடசாலை மாணவி ஒருவரை விடுதி அறை ஒன்றுக்குள் அழைத்து சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த தருணத்தில் பொது மக்களால் சந்தேக நபர் மடக்கி பிடிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மாகாண வித்தியாலயத்தில் தரம், 08 இல் கல்வி பயலும் 13 வயது மாணவி ஒருவரை அறை ஒன்றுக்குள் அழைத்து சென்றதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்டார்.

இந்த சம்பவம் இன்று (17) இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை தரம் 08 மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஒன்றுக்கு அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்த போது குறித்த வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு இல்லையென அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் குறித்த மாணவி பாடசாலையின் மைதானத்தின் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஹோலிரோஸரி தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் ஒன்றின் நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்த கண்டி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய தச்சர் ஒருவர் குறித்த சிறுமிக்கு உணவு தருவதாக கூறி அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அறிந்த வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் இனணந்து சிறுமியை மிட்டுள்ளதோடு சந்தேக நபரை மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கபட்ட 13 வயது சிறுமி பொகவந்தலாவ ஜெப்பல்டன் டி.பி .தோட்டபகுதியை சேர்ந்தவர் யெனவும் சிறுமி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் 18.04.2018 ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here