கினிகத்தேன யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று உயிரிழந்த யுவதி தொலைக்காட்சி நாடக நடிகை என தெரியவந்துள்ளது.

27 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.

 

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இன்று மதியம் 1.30 மணியளவில் குறித்த நடிகை நீரில் முழ்கி காணாமல் போயுள்ள நிலையில் , குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடியுள்ளதை தொடர்ந்து அவரின் சடலம் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறு தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

இவர்கள் நீராடிய இடத்தில் அபாயகரமானது என்ற அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த நடிகை ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்றுள்ளதாகவும் , அங்கு செல்ல வேண்டாம் என தாம் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here