தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்..

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொணடு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகேங்கும் கொண்டு சென்றதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிபெற்றிருந்தார்.

இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கினை அடையவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இரா.சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி ஜ.நா சபை வரைக்கும் சென்றுள்ளார் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் ஊடாக தீர்வு காணும் வழிமுறைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சம்பந்தருடைய முன்னெடுப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று நான் கருத்துக்கூற விரும்பவில்லை.

தந்தை செல்வாவில் இருந்து இரா.சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here