யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவரின் சாதனை பலராலும் பேசப்படுகின்றது.

யாழ். மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவரே சாதனை படைத்துள்ளார்.

 

இவர், ஹயஸ் வாகனம் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியுடன் சேர்த்துக் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை குறித்த வாகனத்தை இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here