வவுனியா நகரசபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா நகரசபைக்கான தவிசாளர் , உப தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆதரவாக 9 வாக்குகளும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு , ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.