கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் வாழ்ந்துவரும் 100 வயதை பூர்த்தி செய்த மூதாட்டியொருவருக்கு அவரது பிள்ளைகள் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.1918ஆம் ஆண்டு பிறந்த, 5 பிள்ளைகளின் தாயான கருப்பையா லட்சுமி என்பவரே நேற்று (சனிக்கிழமை) தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இப்பிறந்தநாளில் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டபிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினர்.

இவரது மூத்த மகள் 80 வயதில் இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், இத்தனை வயதுவரை இருப்பதற்கு அந்நாட்களில் சிறந்த உணவுகளை உட்கொண்டமையே காரணம் எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here