திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18 வயது) எனும் யுவதியே சடமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும், கிணற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here