வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தின் சித்திரைத் தேர் பவனி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் புதுவருட தினமான நேற்று சித்திரைத் தேர் பவனி சிறப்பாக இடம்பெற்றது.

பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அடியவர்கள் தமது நிவர்த்திக் கடன்களைத் தீர்க்க அங்கப் பிரதிஸ்டை செய்து வரவும், கற்பூரச்சட்டி ஏந்தி வரவும் விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட சித்திரைத் தேரில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுவருட தினம் ஆகையால் அடியார்கள் பலரும் புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டு ஆதிவிநாயகப் பெருமானனின் அருளினைப் பெற்றுக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here